TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch: TNSPC March 2017 Current Affairs in Tamil

Latest

Post Top Ad

Showing posts with label TNSPC March 2017 Current Affairs in Tamil. Show all posts
Showing posts with label TNSPC March 2017 Current Affairs in Tamil. Show all posts

Tuesday, April 18

TNPSC Daily Current Affairs in Tamil - March 31, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

21:56 0
TNPSC Daily Current Affairs in Tamil, March 31, 2017 - TNPSCGURU.iN
    • இபோமியா கார்னியே ( Ipomea Carnea )
      • இது ‘நெய்வேலி காட்டமனக்கு’ செடியின் அறிவிய பெயராகும்
      • இது ஈரமான நிலத்திலும் உலர் நிலத்திலும் வாழும் தன்மை உடையது
      • இந்த செடியானது நீர்நிலைகளை தடுத்து ஆழமில்லாத ஒரு தண்ணீர் தீவு போன்று மாற்றும் தன்மை உடையது
    • மலேசிய பிரதமர்
      • மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் இந்தியாவிற்கு வருகை தந்தார்
    • 5 பில்லியன் அமெரிக்க் டாலர்கள் கடன் நீட்டிப்பு
      • இந்தியா தனது அண்டை நாடான வங்காள தேசத்திற்கு 5 பில்லியன் அமெரிக்க் டாலர்கள் கடன் தொகை அதிகமாக கொடுத்துள்ளது
      • இதுவே இந்தியா வங்காள தேசத்திற்கு கொடுத்த அதிக தொகை ஆகும்
    • உடான் திட்டம் ( UDAN Scheme )
      • இது நாட்டின் அதிக பயன்பாடில்லாத மற்றும் பயன்பாடில்லாத விமான நிலையங்களை இணைக்கும் மத்திய அரசின் திட்டம் ஆகும்
      • இந்த திட்டத்தின் கீழ் ஒரு மணி நேரம் அல்லது 500 கிலோமீட்டர்கள் தூரத்திற்கு பயணம் செய்பவர்களுக்கு கட்டணம் 2500 ரூபாயிலிருந்து வகுக்கப்பட்டுள்ளது
    • நியூ டெவலப்மென்ட் வங்கியுடன் இந்தியாவின் முதல் கடன் ஒப்பந்தம்
      • இந்த கடன் தொகையான 350 அமெரிக்க டாலர்கள் மத்திய பிரதேசத்தின் மாவட்ட சாலைப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும்
      • இந்த வங்கியானது ‘பிரிக்ஸ் வங்கி’ எனவும் அழைக்கப்படுகிறது
      • இதன் தலைமையகம் – ஷாங்காய்
      • வங்கியின் தலைவர் – கே.வி. கம்மத்
    • கிறிஸ்டியானோ ரொனால்டோ பெயரில் விமான நிலையம்
      • போர்சுகல் நாட்டின் மதிரா தீவில் உள்ள விமான நிலையத்திற்கு கிறிஸ்டியானோ ரோனால்டாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது
    • எல்சல்வெடார் ( Elsalvador )
      • உலோக சுரங்கங்களை மூடிய உலகின் முதல் நாடு ஆகும்
    • கன்ஹா புலிகள் சரணாலயம்
      • அதிகாரப்பூர்வ சின்னம் கொண்ட நாட்டின் முதல் புலிகள் சரணாலயம்
      • சின்னம் – பூர்ஷிங் என்ற பாரஷிங்ஹா ( சதுப்புநில மான்)
      • கன்ஹா புலிகள் சரணாலயம் மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது
    Read More

    Friday, April 7

    TNPSC Daily Current Affairs in Tamil - March 30, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

    18:58 0


    TNPSC Daily Current Affairs in Tamil, March 30, 2017 - TNPSCGURU.iN
    • பி.எஸ்-III வாகனங்கள் விற்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது
      • பி.எஸ்-III வாகனங்கள் விற்க மற்றும் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது ஏப்ரல் 1, 2017 முதல் அமலுக்கு வருகிறது
    • ஜிசாட் 9
      • இந்த ஜிசாட் 9 ஏவுகணை ஏப்ரல் 2017-ல் விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
    • பாப் டிலன்
      • இவர் 2016-ம் ஆண்டிற்கான நோபல் இலக்கிய பரிசு பெற்ற அமெரிக்க இசைக் கலைஞர்
    • பேராசிரியர் டி.பி.டியோதர் கோப்பை ( கிரிக்கெட் )
      • இறுதிப் போட்டியில் இந்திய சிவப்பு அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி இந்த கோப்பையை கைப்பற்றியது
    • ஆனவால் பிடி
      • கேரள மானிலத்தின் கொல்லத்தில் உமயனல்லூர் ஸ்ரீ பால சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும்  சடங்கு ஆகும்
      • இந்த சடங்கில் பக்தர்கள் யானைகளின் வாலை பிடிப்பதற்காக அதை துரத்தி செல்வார்கள்
    • பிரக்சிட் ( BREXIT )
      • ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக பிரிட்டன் அரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனல்ட் டஸ்க்-க்கு பிரக்சிட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
      • லிஸ்பன் ஒப்பந்தத்தின் ஐம்பதாவது நிபந்தனையை தூண்டி விட்ட முதல் நாடு பிரிட்டன் ஆகும்
      • பிரிட்டன் பிரதமர் – தெரேசா மே
    • லோக் சபா பொருட்கள் மற்றும் சேவை வரிக்கான மசோதாவை நிறைவேற்றியது
      • மார்ச் 29, 2017 அன்று லோக் சபா இந்த மசோதாவை நிறைவேற்றியது
    Read More

    TNPSC Daily Current Affairs in Tamil - March 29, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

    18:57 0


    TNPSC Daily Current Affairs in Tamil, March 29, 2017 - TNPSCGURU.iN

    • மியான்மார் அரசிடம் எல்லை வேலி இடுவதை நிறுத்தக் கோரி மேல்முறையீடு செய்ய தீர்மானம்
      • இந்திய மியான்மர் எல்லையில் போடப்படும் எல்லை வேலியை நிறுத்தக் கோரி மத்திய அரசிடம் மேல்முறையீடு செய்ய நாகாலாந்து சட்டசபை முடிவெடுத்துள்ளது
      • நாகா பழங்குடியினர் இந்தியா மற்றும் மியான்மர் ஆகிய இரு எல்லைகளில் வாழ்வதால் இந்த வேலி இரு எல்லைகளிலும் வாழும் அவர்களை முற்றிலுமாய் பிரிப்பதாய் அமையும்
    • உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் சுரங்க வேலைகளை நான்கு மாதங்கள் தடை செய்துள்ளது
      • சட்ட விரோத சுரங்க வேலைகளை தடுப்பதற்காக உத்தரகண்ட் அரசு இந்த முடிவை எடுத்துள்ளளது
    • நேபாள் இராணுவத்தின் கெளரவ படைத் தலைவர்
      • இந்திய இராணுவ தளபதி பிபின் ராவத்-ற்கு இந்த தலைப்பு நேபாள குடியரசுத் தலைவர் பித்யா தேவி பாந்தரி-ஆல் வழங்கப்பட்டது
      • இதற்கு முன் பெப்ரவரி 2017 நேபாள இராணுவ தளபதி ராஜேந்திர சேத்ரி இந்திய இராணுவத்தின் கெளரவ படைத் தலைவர் அந்தஸ்தை பெற்றார்
      • இந்த பாரம்பரியமானது 1969-ம் ஆண்டு தொடங்கியது
    • அஹமத் கத்ரடா ( Ahmed Kathrada )
      • இவர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இனவெறிக்கு எதிரான ஆர்வலர்
      • இவர் சமீபத்தில் காலமானார்
    Read More

    TNPSC Daily Current Affairs in Tamil - March 28, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

    18:55 0


    TNPSC Daily Current Affairs in Tamil, March 28, 2017 - TNPSCGURU.iN
    • மின்னணு வாக்கு எந்திர வரம்புகள்
      • இந்திய தேர்தல் ஆணையம் மின்னணு வாக்கு எந்திரங்களை இரண்டு நிறுவனங்களில் இருந்து பெறுகிறது 
        • பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
        • எலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா
      • பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எந்திரம் அதிகபட்சம் 64 வாக்காளர்களுக்கு என தயாரிக்கப்பட்டது
      • எலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா தயாரிக்கும் எந்திரம் அதிகபட்சமாக 383 வாக்காளர்களுக்கும் ஒரு நோட்டாவையும் கொண்டது. மொத்தம் 384
    • TU-142M
      • இது நீண்ட தூர கடல் ரோந்து விமானம்
      • இது இந்திய கடற்படையால் சமீபத்தில் சேவையிலிருந்து நீக்கப்பட்டது
    • BS-IV
      • இந்திய அரசாங்கம் ஏப்ரல் 1, 2017 முதல் பி.எஸ்-IV வாகனங்களை கட்டாயப்படுத்த திட்டமிட்டுள்ளது
    Read More

    TNPSC Daily Current Affairs in Tamil - March 27, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

    18:52 0


    TNPSC Daily Current Affairs in Tamil, March 27, 2017 - TNPSCGURU.iN

    • இயான் கிரில்லட் ( Ian Grillot )
      • இவர் உண்மையான அமெரிக்க வீரர் (Real American Hero)என்று இந்திய அமெரிக்க் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்
      • இவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது
      • துபாக்கி சுடு தாக்குதலின் போது ஒரு இந்தியரை காப்பாற்றியதில் இவர் குண்டடி பட்டார்
    • பார்வையின்மைக்கான வரையறையை இந்திய அரசாங்கம் மாற்றுகிறது
      • பார்வையின்மைக்கான கட்டுப்பாடு தேசிய திட்டத்தின் படி ஆறு மீட்டர்கள் தொலைவில் உள்ள விரல்களை கூட்ட முடியாதவர்கள் பார்வையற்றவர்கள் என  வரையறுக்கப்படிருந்தது
      • உலக சுகாதர் அமைப்பின் படி மூன்று மீட்டர்கள் தொலைவில் உள்ள விரல்களை கூட்ட முடியாதவர்கள் பார்வையற்றவர்கள்
      • இந்தியாவும் இதே வரைமுறையை பின்பற்ற இருக்கிறது
      • உலக சுகாதார அமைப்பு தலைமையகம் – ஜெனீவா, சுவிட்சர்லாந்து
    • மார்ச் 26, 2017
      • வங்காள தேசம் 46-வது சுதந்திர தினத்தை கொண்டாடியது
      • இந்நாடு மார்ச் 26, 1971 அன்று சுதந்திரத்தை அறிவித்தது
    • சாந்தி பிரையாஸ் – II
      • இது நேபாள் மற்றும் அமெரிக்காவின் கூட்டு இராணுவப் பயிற்சி ஆகும்
    • கேரி லாம் ( Carrie Lam )
      • ஹாங் காங்-ன் முதல் பெண் தலைமை நிர்வாகி
    • ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் 2017
      • செபாஸ்டின் வெட்டல் ( ஜெர்மனி – பெராரி ) முதலிடத்தை பிடித்தார்
      • இரண்டாம் இடம் – லூயிஸ் ஹேமில்டன் ( பிரிட்டன் – மெர்சிடிஸ் )
    • பிரவுன் டுவார்ப் ( Brown Dwarf )
      • இது கிரகத்திற்கும் முழு நீள நட்சத்திரத்திற்கும் இடைப்பட்ட ஒன்று ஆகும்
      • சமீபத்தில் விஞ்ஞானிகள் 750 ஒளி ஆண்டுகள் தொலைவில் SDSS J0104+1535 என்ற பிரவுன் டுவார்ப்பை கண்டுபிடித்தனர்
    Read More

    TNPSC Daily Current Affairs in Tamil - March 26, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

    18:43 0


    TNPSC Daily Current Affairs in Tamil, March 26, 2017 - TNPSCGURU.iN

    • உலக மணிநேரம்  Earth Hour 2017
      • இது புவி வெப்பமடைவதை முன்னிலைப்படுத்த நடைபெறும் ஒரு நிகழ்வு ஆகும்
      • இது முதன் முதலில் 2007-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது
      • இந்த நிகழ்வு இந்த ஆண்டில்  மார்ச் 25 அன்று நடைபெற்றது
    • ரோம் ஒப்பந்தம்
      • இது மார்ச் 25, 1957 அன்று ஒற்றை சந்தையை நோக்கி நகர்வதற்காக கையெழுத்திடப்பட்டது
      • இதன் 60-ம் ஆண்டு நிறைவு விழாவினை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டாடியது
    • கரன் சிங்கா
      • இவர் சென்னையில் புதிதாக நியமிக்கப்பட்ட காவல்துறை ஆணையர்
    • தாணுஸ்ரீ பரீக்
      • இவர் எல்லை பாதுகாப்பு படையின் முதல் பெண் போர் அதிகாரி
    • சுனில் லம்பா – இந்திய கடற்ப்படை தலைமை அதிகாரி
    • அஜித் தொவல் – இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
    • அஜின்க்யா ரஹானே
      • இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் 33-வது கேப்டன்
    Read More

    TNPSC Daily Current Affairs in Tamil - March 25, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

    18:42 0


    TNPSC Daily Current Affairs in Tamil, March 25, 2017 - TNPSCGURU.iN

    • குன்னந்தனம் கிராமம்
      • இது கேரளாவைச் சார்ந்த ஒரு கிராமம்
      • இந்த கிராமம் கேரளாவின் முதல் முழு யோகா கிராமம் ஆகா பல முயற்சிகள் எடுத்துள்ளது
      • ஜூன் 21- உலக யோகா தினம்
    • ராணி மரியா
      • இவர் கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி
      • இவரது புனிதத்துவத்தை வாடிகன் ஏற்றது
      • கத்தோலிக்க அர்ச்சிப்பு நான்கு நிலைகளில் நடைபெறும்
        • கடவுளின் சேவகர்
        • மதிப்பிற்குரியவர்
        • பாக்கியம் பெற்றவர்
        • புனிதத்துவம் பெற்றவர்
    • காசநோய் ( TB )
      • இது மைகோபேக்டீரியம் என்னும் நுண்ணியிரியினால் ஏற்படுகிறது
      • இது காற்று வழியாக பரவும் தொற்று நோய் ஆகும்
      • காச நோய் நுரையீரலைத் தாக்கும். அதுமட்டுமல்லாது மூளை மற்றும் முதுகெலும்பு பகுதிகளுக்கு பரவும்
      • DRTB – இது காசநோய்க்கு அளிக்கப்படும் மருந்தை கூட எதிர்க்கும் சக்தி கொண்ட ஒரு வித காசநோய் ஆகும்
      • உலகில் நான்கில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்
      • உலக சுகாதார அமைப்பால் இந்த நோய்க்காக அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள்
        •  டேலாமினிட் ( Delaminid )
        •  பீடாகுயிலின் ( Bedaquiline )
      • மார்ச் 24 – உலக காசநோய் தினம்
    • ஆதாம் பாலம்
      • இது பாம்பன் தீவிற்கும் மன்னார் தீவிற்கும் இடையே உள்ள சுண்ணாம்பு திரள் சங்கிலி போன்ற அமைப்பு
      • இதன் நீளம் 50 கி.மீ
    • பராக் ஏவுகணை
      • இது குறுகிய வரம்பில் தாக்கும் காற்று ஏவுகணை
      • இது ஐ.என்.எஸ்.விக்ரமாதித்யா என்னும் விமானம் தாங்கி கப்பலிலிருந்து சோதனை செய்யப்பட்டது
    • மொபைல் சேவைகளுக்கு ஆதார் அவசியம்
      • வாடிக்கையாளர் சேவை மையத்தில் ஆதார் எண்ணை சேர்க்க அனைத்து தொலை தொடர்பு சேவை நிறுவனங்களுக்கும் தொலை தொடர்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது
    Read More

    TNPSC Daily Current Affairs in Tamil - March 24, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

    18:40 0


    TNPSC Daily Current Affairs in Tamil, March 24, 2017 - TNPSCGURU.iN

    • மார்ச் 24, 2017 – உலக காசநோய் தினம்
      • இந்த நோய் மைகோபேக்டீரியம் என்னும் நுண்ணியிரியினால் ஏற்படுகிறது
    • ஏபல் பரிசு 2017
      • 2017-ம் ஆண்டிற்கான ஏபல் பரிசு ஐவிஸ் மேயர் ( Yves Meyer ) என்பவருக்கு வழங்கப்பட்டது
      • இந்த பரிசானது நார்வே அறிவியல் மற்றும் கடிதம் அகாடமி சார்பாக கணித துறையில் வழங்கப்பட்டது
      • இந்த பரிசானது ஐவிஸ் மேயரின் “வேவ்லெட் கோட்பாடு”-காக ( Theory of Wavelet ) வழங்கப்பட்டது
    • அசோகமித்திரன் (உண்மையான பெயர் : தியாகராஜன் )
      • இவர் ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர். சமீபத்தில் காலமானார்
      • இவர் “அப்பாவின் சிநேகிதர்” என்னும் புத்தகத்திற்காக 1996-ம் ஆண்டு சாகித்திய அகாடெமி விருதைப் பெற்றார்
    • எஸ். நாகராஜன் – தேசிய பால் பொருட்கள் மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குனர்
    • ஐ.எஸ்.எஸ்.எப். உலக கோப்பை ( துப்பாக்கி சுடுதல் )
      • இதில் சிறிய இரட்டைக் குழல் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவை சார்ந்த அங்குர் மிட்டல் ( Ankur Mittal ) என்பவர் தங்கம் வென்றார்
    • குறைவான அளவு ஆர்டிக் பனி பதிவு
      • மார்ச் மாதங்களில் ஆர்டிக் பிரதேசத்தின் துருவ பனி விரிப்பு அதிகமாக இருக்கும்
      • பின்னர் கோடை கால வெயிலால் பணி உருகி செப்டம்பர் மாதத்தில் இதன் அளவு குறைவாக இருக்கும்
      • இந்த மார்ச் மாத பனி அளவு 14.42 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள். இது கடந்த 38 வருடங்களில் குறைவான பதிவு ஆகும்
    • உலக ஆற்றல் மற்றும் வளர்ச்சி செயல்திறன் குறியீட்டு எண் 2017
      • இது உலக பொருளாதார மன்றத்தால் வெளியிடப்பட்டது
      • இந்த தர வரிசையில் இந்தியா 87-வது இடத்தைப் பிடித்தது
      • முதல் மூன்று நாடுகள்சு
        1. சுவிட்சர்லாந்து
        2. நார்வே
        3. சுவீடன்
    Read More

    TNPSC Daily Current Affairs in Tamil - March 23, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

    18:32 0


    TNPSC Daily Current Affairs in Tamil, March 23, 2017 - TNPSCGURU.iN
    • 32-வது ஒலிம்பிக் போட்டிகள்
      • இந்த போட்டியானது 2020-ல் ஜப்பானில் வைத்து நடைபெறவிருக்கிறது
      • 2016 – ரியோ டி ஜெனீரோ – பிரேசில்
      • 2012 – லண்டன் – இங்கிலாந்து
    • மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் – சையத் ராத் அல் ஹுசைன்
    • நிதி மசோதா 2017
      • லோக் சபா நிதி மசோதாவை மார்ச் 22, 2017 அன்று நிறைவேற்றியது
      • இந்த மசோதாவில் பான் கார்ட் வாங்குவதற்கு ஆதார் கார்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது
      • இந்த நடவடிக்கையால் ஒன்றை விட அதிக பான் கார்டுகள் வைத்திருப்பவர்களை எளிதாக கண்டுபிடித்து விடலாம்
    • தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய குழு
      • நீதிபதி மாசிலாமணி இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
    • தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோக மையம் (TANGEDCO) புதிய அருங்காட்சியகம் நிறுவியுள்ளது
      • இந்த அருங்காட்சியகத்தை ஊட்டி-க்கு அருகே உள்ள குன்தா என்னும் இடத்தில் நிறுவியுள்ளது
      • இதில் பல்வேறு மின் உற்பத்தி முயற்சிகள் காட்சிப் படுத்தப்படவுள்ளன
    • உலகின் மிகப்பெரிய அதிமீயொலி ( Hypersonic ) காற்றுச் சுரங்கம்
      • இந்த சுரங்கத்தை ஐ.எஸ்.ஆர்.ஒ. நிறுவனம் திருவனந்தபுரத்தின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் நிறுவியுள்ளது
      • இது ஹைபர்சோனிக் சுற்றுச்சூழலில் விண்வெளி வாகனங்களின் காற்றியக்கவியல் பண்புகளை பற்றிக் கற்றுக்கொள்வதற்கு உதவியாக இருக்கும்
    Read More

    TNPSC Daily Current Affairs in Tamil - March 22, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

    18:29 0


    TNPSC Daily Current Affairs in Tamil, March 22, 2017 - TNPSCGURU.iN

    • பண பரிவர்த்தனை வரம்பு குறைப்பு
      • மத்திய அரசு பண பரிவர்த்தனை வரம்பை 3 லட்சத்திலிருந்து 2 லட்சமாக குறைக்க திட்டமிட்டுள்ளது
      • இது ஏப்ரல் 1, 2017 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது
      • இந்த வரம்பை தாண்டி பரிவர்த்தனை செய்வோருக்கு அந்த பரிவர்த்தனை மதிப்பில் நூறு சதவிதம் அபராதம் அளிக்கப்படும்
    • ஐ.என்.எஸ்.விராட்
      • சமீபத்தில் சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட பழமையான போர்க்கப்பல்
      • ஆந்திர அரசு இந்த கப்பலை ஒரு அருங்காட்சியகமாக மாற்ற மத்திய அரசுக்கு முன்மொழிந்தது. அனால் அது மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது
    • துருக்கி குடியரசு தலைவரின் இந்திய சந்திப்பு
      • துருக்கியின் குடியரசுத் தலைவர் ரிசப் தயிப் எர்கோடன் மே 2017-ல் இந்தியாவிற்கு வர திட்டமிட்டுள்ளார்
    • மனித வளர்ச்சி குறியீடு 2016 HDI 
      • இது ஐக்கிய நாடுகள் வளர்ச்சி குழுவால் வெளியிடப்பட்டது
      • தர வரிசை
        • 1 – நார்வே
        • 2 – ஆஸ்திரேலியா
        • 3 – சுவிட்சர்லாந்து
        • 130 – இந்தியா
      • இந்த மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா 130-வது இடம் பிடித்தது
    • மியார் நீர்மின் திட்டம்
      • இந்த திட்டத்தை இமாச்சல பிரதேச மாநிலத்தின் செனாப் நதியில் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது
    • மார்டின் மெக்கின்னஸ் ( Martin McGuinness )
      • இவர் ஐயர்லாந்து குடியரசின் இராணுவ தளபதி
      • வடக்கு ஐயர்லாந்தின் அமைதிக்காக பாடுபட்டவரான இவர் சமீபத்தில் காலமானார்
    • இயேசு கிறிஸ்துவின் கல்லறை
      • புதுப்பிக்கப்பட்ட இயேசுவின் கல்லறை விரைவில் பார்வைக்கு வரவிருக்கிறது
      • இது இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேமில் அமைந்துள்ளது
    Read More

    TNPSC Daily Current Affairs in Tamil - March 21, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

    18:24 0


    TNPSC Daily Current Affairs in Tamil, March 21, 2017 - TNPSCGURU.iN

    • வோடபோன் மற்றும் ஐடியா இணைகிறது
      • வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைய திட்டமிட்டுள்ளன
      • இந்த இணைப்பால் 39.25 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு இது இந்தியாவின் மிகப்பெரிய தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமாக மாறவிருக்கிறது
    • கங்கை மற்றும் யமுனை – உயிருள்ள மனிதர்கள் அந்தஸ்து 
      • உத்தரகண்ட் உயர் நீதி மன்றம் கங்கை மற்றும் யமுனை நதிகளை உயிருள்ள மனிதர்கள் அந்தஸ்து வழங்கி உள்ளது.
      • ஒரு நதிக்கு  மனிதர்கள் அந்தஸ்து வழங்குவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்
      • ஓரு நதியை வாழும் மனிதர்கள் என அறிவித்த முதல் நாடு நியூசிலாந்து
      • நியூசிலாந்து வங்கானி என்னும் நதியை சட்டபூர்வமாக வாழும் நிறுவனமாக அறிவித்தது.
    • பியாரிமோகன் மொஹாபத்ரா ( Pyarimohan Mohapatra )
      • இவர் முன்னாள் ராஜ்ய சபா மன்ற உறுப்பினர்
      • ஓடிசா அரசியலின் சாணக்யன் என்று அழைக்கப்பட்டவர்
      • இவர் சமீபத்தில் காலமானார்
    • கீர்த்தி சக்ரா விருது
      • மேஜர் ரோஹித் சுரி-க்கு இந்த விருது இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது
      • இது இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதி கால வீர விருது ஆகும்
      • இவர் பல போர் தாக்குதல்களில் பங்குபெற்றதற்காக இந்து விருது வழங்கப்பட்டது
    • உலக மகிழ்ச்சிக் குறியீடு 2017
      • இது ஐக்கிய நாடுகள் அமைப்பால் வெளியிடப்பட்டது
      • முதலிடம் – நார்வே
      • இரண்டாவது இடம் – டென்மார்க்
      • மூன்றாவது இடம் – ஐஸ்லாந்து
      • 122 – வது இடம் – இந்தியா
    • இந்தியாவின் சிறந்த மாஸ்டர் 2017
      • ரோஜர் பெடரர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்த பட்டத்தை வென்றார்
      • இந்த பட்டத்தை வென்ற அதிக வயதுடையவரும் இவரே
    • விஜய் ஹசாரே கோப்பை 2017
      • தமிழ்நாடு அணி இறுதி போட்டியில் பெங்கால் அணியை வீழ்த்தி இந்த கோப்பையை கைப்பற்றியது
    • உலக ஆசிரியர் பரிசு
      • இந்த பரிசு கனடாவைச் சேர்ந்த ஆசிரியரான மேகி மெக்டோநல் என்பவருக்கு வழங்கப்பட்டது ( MaggieMacDonnell )
    Read More

    TNPSC Daily Current Affairs in Tamil - March 20, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

    17:22 0


    TNPSC Daily Current Affairs in Tamil, March 20, 2017 - TNPSCGURU.iN

    • மார்ச் 20, 2017 – உலக சிட்டுக் குருவிகள் தினம்
    • சதீஷ்வர் புஜாரா
      • இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 525 பந்துகளை சந்தித்து 202 ரன்கள் சேர்த்தார்
      • ஒரு இன்னிங்சில் அதிக பந்துகளை சந்தித்த இந்தியர் எனும் சாதனை படைத்தார்
    • இந்தியாவின் நீண்ட சுரங்கப்பாதைச் சாலை
      • செனானி-நஷிரி ( Chenani-Nashiri ) சுரங்கப்பாதை சாலைதான் இந்தியாவில் நீளமானது
      • இது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது
      • இதன் நீளம் 9 கிலோமீட்டர்கள்
    • மேதா ( Medha )
      • இது முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயில் ஆகும்
      • இது  சென்னையின் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தொழிற்சாலையில் செய்யப்பட்டது
      • மும்பையின் தாதார் ( Dadar ) நிலையத்திலிருந்து இயக்கப்பட்டது
    • சர்வதேச புத்த மதகுருக்கள் கூட்டம் 2017
      • இது ராஜ்கிரில் உள்ள நளந்தாவில் வைத்து நடைபெற்றது
      • நிகழ்வின் தலைப்பு – 21 – ம் நூற்றாண்டில்  புத்த மதம் – உலக சவால்கள் மற்றும் நெருக்கடிகளுக்கான பதில்கள் மற்றும் கண்ணோட்டங்கள்
    • நமாமி பிரமபுத்திரா ( Namami Brahmaputra )
      • இது அசாம் அரசால் பிரமபுத்திரா நதியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆற்றுத் திருவிழா ஆகும்
    Read More

    Sunday, April 2

    TNPSC Daily Current Affairs in Tamil - March 19, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

    17:34 0


    TNPSC Daily Current Affairs in Tamil, March 19, 2017 - TNPSCGURU.iN

    • புதிய உத்தர பிரதேச முதலமைச்சர்
      • யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்
      • இரண்டு துணை முதல்வர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்
        • கேசவ் பிரசாத் மெளரியா
        • தினேஷ் ஷர்மா
      • உத்தர பிரதேச கவர்னர் – ராம் நாயக்
    • அஸ்வின் சுந்தர்
      • இவர் ஒரு இந்திய கார் பந்தய வீரர்
      • இவர் சமீபத்தில் வாகன விபத்தில் உயிரிழந்தார்
    • கிளவுட் சீடிங் ( Clous Seeding )
      • இது மேகங்களில் செயற்கை முறையில் ஈரப் பதத்தை தூண்டி வீழ்படிவத்தை உண்டாக்கும் முறை
      • இந்த முறைக்கு சில்வர் ஐயோடைடு கனிம கலவை பயன்படுத்தப்படுகிறது
    • தேவ் ராஜ் சிக்கா ( Dev Raj Sikka )
      • புகழ்பெற்ற இந்திய வானவியல் ஆராய்ச்சியாளரான இவர் சமீபத்தில் காலமானார்
      • எல்நினோ விளைவை இந்தியப் பருவங்களுடன் தொடர்பு படுத்திய முதல் நபர் இவரே
    • தேசிய சுகாதார கொள்கை – 2017 – அம்சங்கள்
      • பொது சுகாதார செலவை மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதத்தில் உயர்த்துதல்
        • 2025- க்குள் 1.15 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாக உயர்த்துதல்
      • 2025 – க்குள் வீட்டு சுகாதார செலவை 25 சதவிதமாக குறைத்தல்
      • 2025 – க்குள் பொது சுகாதார வசதிகளை 50 சதவிதம் பயன்படுத்துதல்
      • தனி நபர்களுக்கு மின்னணு சுகாதார அட்டைகளை அறிமுகப்படுத்துதல்
      • 2020 – க்குள் அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர்
    • மேற்கு வங்காளம்
      • இந்தியாவில் Arsenic இரசாயனத்தால் பாதிப்படைந்த மக்கள் அதிகம் வாழும் மாநிலம்
    • புத்தகம்
      • லக்ஷ்மி தேவியின் பரிசு : திருநங்கை கொள்கைகள் பற்றிய நேர்மையான சுயசரிதை
      • A Gift of Goddess Lakshmi : A Candid Biography of the First Transgender Principle
      • எழுதியவர் – மனோபி பாந்த்யோபத்யாய் ( Manobi  Bandyoopadhyay )
    • ஜி – 20  நிதி அமைச்சர்கள் சந்திப்பு 2017
      • இந்த கூட்டம் ஜெர்மனியின் பேடன்-பேடனில் ( Baden – Baden ) வைத்து நடைபெற்றது
    Read More

    TNPSC Daily Current Affairs in Tamil - March 18, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

    17:32 0


    TNPSC Daily Current Affairs in Tamil, March 18, 2017 - TNPSCGURU.iN

    • புதிய உத்தரகண்ட் முதலமைச்சர்
      • திரிவேந்திர ராவத் உத்தரகண்டின் புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்
      • உத்தரகண்ட் கவர்னர் – கே.கே. பால்
    • மார்ச் 18, 2017 – Odinance Factory Day
    • நம்ம உணவகம்
      • தமிழ்நாட்டின் ‘அம்மா உணவகம்’ திட்டத்தை தொடர்ந்து கர்நாடகாவில் உணவு தள்ளுபடி திட்டமாக இந்த ‘நம்ம  உணவகம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது
      • அம்மா உணவக திட்டம் தமிழகத்தில் 2013 –ம் ஆண்டு தொடங்கப்பட்டது
    • பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்
      • புதிய பிளாஸ்டிக் ருப்பாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்யவிருக்கிறது
      • இந்த நோட்டுகள் தற்போது உள்ள நோட்டுகளை விட நீண்ட ஆயுள் கொண்டதாக அமையும்
    • முதல் இந்திய ரஷிய இராணுவ தொழில்துறை மாநாடு
      • இது புது டெல்லியில் வைத்து நடைபெறவுள்ளது
      • சுக்ஹோய் போர் விமானத்திற்கான உபகரணங்களை நீண்ட நாட்களுக்கு விநியோகம் செய்யும் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன
    • டெரிக் வால்காட்  ( Derek Walcot )
      • இவர் நோபல் பரிசு பெற்ற கவிஞர்
      • இவர் சமீபத்தில் காலமானார்
    • தினானந் பாண்டே ஸ்மார்ட் கண்டுபிடிப்புக்கான விருது
      • அனாக் தடார் ( Anag Tadar ) பார்வையற்றவர்களுக்கான பாதுகாப்பு கண்ணாடி கண்டுபிடித்ததற்காக இந்த விருதை பெற்றார்
      • இந்தக் கண்ணாடி மீயொலி மற்றும் அகச்சிவப்பு சென்சார்கள் மூலம் எதிரொலி இடமாக்கத்தை கொள்கையாக கொண்டு செயல்படுகிறது
    Read More

    TNPSC Daily Current Affairs in Tamil - March 17, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

    17:30 0


    TNPSC Daily Current Affairs in Tamil, March 17, 2017 - TNPSCGURU.iN
    • இந்திராணி தாஸ்
      • இவர் அமெரிக்காவின் ரீஜெனறான் அறிவியல் திறன் தேடல் போட்டிக்கான பரிசு 2,50,000 அமெரிக்க டாலர்களைப் பெற்றார்
      • இந்த விருது “ஜூனியர் நோபல் பரிசு” எனவும் அழைக்கப்படுகிறது
      • இந்திராணி தாஸ் இந்த விருதை மூளைக் காயம் மற்றும் நோய் சிகிட்சை சார்ந்த ஆராய்ச்சிக்காக பெற்றார்
    • வங்கானி நதி ( Whanganui River )
      • இந்த நதி நியுசிலாந்தில் அமைந்துள்ளது
      • நியுசிலாந்து பாராளுமன்றம் இந்த நதியை சட்டபூர்வமான நபராக கருத்தில் கொண்டு இதை “வாழும் பொருள்”-ஆக அறிவித்துள்ளனர்
    • மார்க் ரூட் ( Mark Rutte )
      • இவர் நெதர்லாந்தின் பிரதம மந்திரி
      • இவரின் “சுதந்திரம் மற்றும் ஜனநாயக மக்கள் கட்சி” பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது
    • புதிய பஞ்சாப் முதல் அமைச்சர்
      • கேப்டன். அமரிந்தர் சிங் பஞ்சாபின் புதிய முதல் அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்
      • இவர் முதலமைச்சர் ஆவது இரண்டாவது முறை ஆகும்
      • பஞ்சாப் கவர்னர் – வி.பி.சிங்
      • Article 164 ( 1 ) – கவர்னரால் முதலமைச்சர் நியமிக்கப்படுவது
    • உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 2016
      • இந்த பட்டியல் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் மூலம் வெளியிடப்படுகிறது
      • முதலிடம் – தமிழ் நாடு
      • இரண்டாவது இடம் – உத்தர பிரதேசம்
    • தமிழ் நாடு Budget 2017
      • தமிழ் நாட்டு நிதி அமைச்சர் – டி. ஜெய குமார்மா
      • நிலத்தின் நிதி பற்றாக்குறை ஒட்டுமொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் 4.58 சதவிதம்
      • இது FRBM நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 3 சதவிதத்தை விட அதிகம்
    Read More

    TNPSC Daily Current Affairs in Tamil - March 16, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

    17:21 0
    TNPSC Daily Current Affairs in Tamil, March 16, 2017 - TNPSCGURU.iN

    • ஸ்கை டிராக்ஸ் விருதுகள் 2016 ( SKYTRAX Award 2016 )
      • பெங்களூருவின் கெம்பகவ்டா ( Kempegowda ) சர்வதேச விமான நிலையம் இந்தியா மற்றும் மத்திய ஆசியாவின் சிறந்த பிராந்திய விமான நிலையத்திற்கான விருதினைப் வென்றது ( SKYTRAX Award )
    • புதிய பொது கணக்குக் குழு தலைவர் Public Accounts Committee Head
      • மல்லிகர்ஜூன் கார்கே ( Mallikarjun Kharge ) புதிய பொது கணக்குக் குழு தலைவராக பதவியேற்க இருக்கிறார்
      • இவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்
      • தற்போதைய பொது கணக்குக் குழு தலைவர் கே.வி. தாமஸ் அவர்களுடைய பதவி காலம் மார்ச் 30, 2017 அன்று முடிவடைகிறது
    • ஷாஷன்க் மனோகர் ( Shashank Manohar )
      • இவர் தனது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்
      • முன்னதாக இவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சுயாதீன தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்
    • வங்காள தேசம் ( Bangladesh )
      • வங்காள கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வேகமாக 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த நாடாக மாறியுள்ளது
    • டி.ஐ.இ.எஸ். ( TIES )
      • ஏற்றுமதி திட்டத்திற்கான வர்த்தக உள்கட்டமைப்பு
      • TIES – Trade Infrastructure for Export Scheme
      • ஏற்றுமதி தொடர்பான உள்கட்டமைப்பை அதிகரிக்க மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும்
      • இந்த திட்டம் ஏற்கனவே இருக்கும் ‘அசைட்’ ( ASIDE ) திட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ளது
      • ASIDE  - Assistance to States for creating Infrastructure for Development and growth of Exports
    Read More

    TNPSC Daily Current Affairs in Tamil - March 15, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

    17:18 0
    TNPSC Daily Current Affairs in Tamil, March 15, 2017 - TNPSCGURU.iN

    • கோவாவின் புதிய முதல் அமைச்சர்
      • மனோகர் பாரிக்கர் ( Manohar Parrikar ) கோவாவின் புதிய முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டுளார்
      • இவர் பா.ஜா.க. கட்சியைச் சார்ந்தவர்
      • கோவாவின் கவர்னர் ‘மிருதிலா சின்ஹா’ இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
    • மணிப்பூரின் புதிய முதல் அமைச்சர்
      • பிரேன் சிங் ( Biren Singh ) மணிப்பூரின் புதிய முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டுளார்
      • இவர் பா.ஜா.க. கட்சியைச் சார்ந்தவர்
      • மணிப்பூரின் கவர்னர் – நிஜாம் ஹெப்துல்லா ( NIjam Heptula )
    • அருண் ஜெட்லி
      • முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கோவாவின் புதிய முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டுளார்
      • தற்போதைய நிதி அமைச்சரான ‘அருண் ஜெட்லி’-க்கு கூடுதல் பொறுப்பாக பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது
    • புத்தகம்
      • என் கதை – இது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான மைக்கேல் கிளார்க் எழுதிய சுயசரிதை ஆகும்
      • ‘My Story’ – by Michael Clarke ( Australian Cricketer )
    • போல்கா டாட் மரத் தவளை
      • இது உலகில் கண்டுபிடிக்கப்பட முதல் ஒளிரும் தவளை
      • இதனை அர்ஜென்டினா விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்
      • இந்த தவளையின் அறிவியல் பெயர் – ஹிப்சிபோஸ் பங்டேடஸ் ( Hypsiboas punctatus )
    Read More

    TNPSC Daily Current Affairs in Tamil - March 14, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

    17:17 0
    TNPSC Daily Current Affairs in Tamil, March 14, 2017 - TNPSCGURU.iN

    • சேமிப்பு கணக்குகளில் இருந்து பணம் எடுக்கும் வரம்பு நீக்கம்
      • சேமிப்பு கணக்குகளில் இருந்து பணம் எடுக்கும் வரம்பை மார்ச் 13, 2017 அன்று இந்திய ரிசர்வ் வங்கி நீக்கியது
    • அம்மாவின் அரண்
      • இது அ.இ.அ.தி.மு.க. கட்சியினால் வெளியிடப்பட்ட மென்பொருள் பயன்பாடு ஆகும்
      • இதில் பெண்களுக்கென பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன
    • பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கவிருக்கிறது
      • 19 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடங்கியிருக்கிறது
      • கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 1998-ல் எடுக்கப்பட்டது
    • புத்தகம்
      • இந்திய நாய்கள் புத்தகம் – எழுதியவர் ‘எஸ். தியோடர் பாஸ்கரன்’ -  (The Book Of Indian Dogs – by S. Theodore Baskaran)
    • குடிமரமத் திட்டம்
      • இது தமிழ்நாட்டின் 30 மாநிலங்களின் நீர்நிலைகளுக்கு புத்துயிர் கொடுக்கும் திட்டமாகும்
      • திட்டம் குடிமக்கள் மற்றும் சில விவசாய சங்கங்களுடன் கூட்டு சேர்த்து ஏரிகளை தூர் எடுக்கும் பணி ஆகும்
      • இந்த திட்டம் 100 கோடி ரூபாய் செலவில் நடைபெறவிருக்கிறது
    Read More

    Friday, March 31

    TNPSC Daily Current Affairs in Tamil - March 13, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

    23:33 0


    TNPSC Daily Current Affairs in Tamil, March 13, 2017 - TNPSCGURU.iN

    • Operation Search Light
      • இது 1971-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தால் வங்காள தேசத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பெயர் ஆகும்
      • சமீபத்தில் வங்காள தேச அரசு இந்த தாக்குதல் நடத்தப்பட்ட தினமான மார்ச் 25-ஐ இனப்படுகொலை தினமாக அறிவித்தது
    • இந்தியா ஓபன் கோல்ப் 2017 ( India Open Golf  2017 )
      • ஷிவ் ஷங்கர் செளராசியா ( Shiv Shankar  Chowrasia ) இந்தியா ஓபன் கோல்ப் 2017 பட்டத்தை வென்றார்
    • மிச்செல் டீமர் ( Michel Temer ) – பிரேசில் நாட்டின் குடியரசுத் தலைவர்
    • ரெசெப் தயிப் எர்டோகன் ( Recep Tayyip Erdogan ) – துருக்கி நாட்டின் குடியரசுத் தலைவர்
    • ஹைபர் லூப் ( Hyperloop )
      • காந்த சக்தியால் மிதக்கும் காப்சியூல்களை வெற்றிடத்தின் வழியாக அனுப்பும் ஒரு வித போக்குவரத்து அமைப்பு ஆகும்
      • ஹைபர் லூப் என்னும் கருத்து முதன் முதலில் ஈடன் மஸ்க் ( Eden Musk ) என்பவரால் முன்மொழியப்பட்டது
      • இந்த ஹைபர் லூப் வழியாக நாம் ஒரு மணி நேரத்திற்கு 1200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும்
      • உலகின் முதல் வணிக ரீதியான ஹைபர் லூப் போக்குவரத்து அமைப்பு துபாய் மற்றும் அபு தாபி-க்கு இடையே கட்டப்பட உள்ளது
    Read More

    TNPSC Daily Current Affairs in Tamil - March 12, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

    23:31 0


    TNPSC Daily Current Affairs in Tamil, March 12, 2017 - TNPSCGURU.iN

    • ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் 2017

    மாநிலம்
    மொத்த இருக்கைகள்
    முதல் மற்றும் இரண்டாம் இடம்
    உத்தரப் பிரதேசம்
    403
    1.       பா.ஜா.க – 312
    2.       சமாஜ்வாடி கட்சி - 47
    உத்தரகண்ட்
    70
    1.       பா.ஜா.க  - 57
    2.       இந்திய தேசிய காங்கிரஸ் - 11
    பஞ்சாப்
    117
    1.       இந்திய தேசிய காங்கிரஸ் – 77
    2.       ஆம் ஆத்மி கட்சி - 20
    மணிப்பூர்
    60
    1.       இந்திய தேசிய காங்கிரஸ் – 28
    2.       பா.ஜா.க – 27
    கோவா
    40
    1.       இந்திய தேசிய காங்கிரஸ் - 17
    2.       பா.ஜா.க - 13

    •  பிங்கதான் ( Pinkathan )
      • இது மகளிர் நலன் மற்றும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்கான marathan நடத்தப்பட்டது
    • அச்சமற்ற பெண் சிலை
      • சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இந்த சிலை நியூ யார்க் நகரின் வால் ஸ்ட்ரீட்-ல் ( Wall Street ) நிறுவப்பட்டுள்ளது
      • இந்த சிலையின் உயரம் - 50 அங்குலம்
    • புத்தகம்
      • இன்றியமையாத அம்பேத்கர் – இந்த புத்தகம் பாலச்சந்திர முங்கேகர் ( Balachandra Mungekar ) என்பவரால் எழுதப்பட்டது
    Read More

    Post Top Ad