TNPSC Current Affairs – March 2 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Wednesday, March 14

TNPSC Current Affairs – March 2 2018 – Tamil

TNPSC Current Affairs - March 2018 by TNPSC Guru

TNPSC Current Affairs – March 2 2018 – Tamil (tnpscguru.in) 

1)       தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் எதிரான மசோதா 2018

      ·         Fugitive Economic offenders Bill, 2018

      ·         தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் எதிரான மசோதா 2018-ற்கு  மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

     ·         இந்திய நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்கு உட்பட்ட இந்திய சட்டத்திலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் பொருளாதார குற்றவாளிகளைத் தடுக்க இந்த மசோதா உதவுகிறது

     ·         100 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட மொத்த மதிப்பு இந்த மசோதாவின் கீழ் வருகிறது

2)       தேசிய நிதி அறிக்கை ஆணையம்

     ·         National Financial Reporting Authority (NFRA)

     ·         தேசிய நிதி அறிக்கை ஆணையம் அமைப்பதிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

     ·         இந்த ஆணையம் தன்னிச்சையாக செயல்படும். பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத தணிக்கை நிறுவனங்கள் கணக்குகள் சம்மந்தமாக இந்த ஆணையம் செயல்படும்

3)       இந்தியா மற்றும் ஜோர்தான் ஒப்பந்தம்

     ·         ஜோர்தானின் அரசர் அப்துல்லாஹ் II இப்னு அல் ஹுசைன்-ன் ( Abdullah II Ibn Al Hussein) இந்திய வருகையின் போது இந்தியா ஜோர்தான் இடையே 12 ஒப்பந்தங்கள் கைஎழுதிடப்பட்டன

       முக்கிய ஒப்பந்தங்கள்

         ·         பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு

         ·         அதிகார  மற்றும் உத்தியோகபூர்வ பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஒப்பந்த விசா இல்லாமல் சென்று வர முடியும்

         ·         கலாச்சார பரிமாற்ற திட்டங்கள், மனிதவள ஒத்துழைப்பு, சுகாதாரம் மற்றும் மருத்துவம் பற்றிய ஒத்துழைப்பு

         ·         பாஸ்பேட் மற்றும் உரங்கள் நீண்ட கால வழங்கல்

         ·         ஹிந்தி இருக்கை தொடர்பாக யுனிவர்சிட்டி ஆஃப் ஜோர்டான் (யு.ஜே.) மற்றும் இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் (ICCR) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (UCR)
   ·         ஜோர்தானில் சிறப்பு மையம் அமைத்தல்

4)       ஷக்தி ஸ்தலா

        ·         கர்நாடகாவின் துமுகுரு மாவட்டத்தின் பாவாகாடாவில் உலகின் மிகப்பெரிய சூரிய பூங்காவின் முதல் கட்டம் கர்நாடக அரசால் திறந்துவைக்கப்பட்டது

      ·         பூங்காவின் பெயர்  -  ஷக்தி ஸ்தலா

     ·         இது 2,000 மெகாவாட் திறன் கொண்டது. முதல் கட்டமாக 600 மெகாவாட் உற்பத்தி செய்யப்படும்

5)       தமிழ்நாடு மாநில உணவு ஆணையம்

     ·         தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவராக ஆர். வாசுகி நியமிக்கப்பட்டுள்ளார்

     ·         தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் 16 வது பிரிவின்படி, ஒவ்வொரு மாநிலமும் NFSA ஆல் செயல்படுத்தப்படும் விஷயங்களை கண்காணிக்கவும் மறுபரிசீலனை செய்யவும் மாநில உணவு கமிஷன் அமைக்கப்பட வேண்டும்.

6)       நூற்றாண்டு போதாது (Century is not enough)

     ·         முன்னாள் கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி வெளியிட்ட புத்தகம்


No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad