TNPSC Current Affairs – April 05 2018 – Tamil (tnpscguru.in) - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Tuesday, April 10

TNPSC Current Affairs – April 05 2018 – Tamil (tnpscguru.in)

TNPSC Current Affairs - April 2018 by TNPSC Guru
TNPSC Current Affairs – April 05 2018 – Tamil (tnpscguru.in)


1) மனித உரிமைகள் பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா 2018
  • மத்திய அரசு சிறந்த பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் ஆகியவட்டிர்க்காக இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது· இந்த திருத்தத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC) ஆகியவை பாரிஸ் கோட்பாட்டுடன் இணைத்து சுயாட்சி, தனி மனித சுதந்திரம் மற்றும் இன்னும் பலவற்றை மனித உரிமைகள்பாதுக்கப்புடன் இணைக்கிறது
  • மனித உரிமைகள் நிறுவனத்தை பலப்படுத்துவதற்கு இது உதவுகிறது. இது அவர்களின் கடமைகளை இன்னும் சிறப்பாக நிறைவேற்றுவதோடு, வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் மரியாதை ஆகியவற்றின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும்.
2) இந்தியா, ஜப்பான், அமெரிக்க 9 வது முத்தரப்பு கூட்டம்
  • இந்த கூட்டமானது புது டெல்லியில் வைத்து நடைபெற்றது· ஒருங்கிணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி, எதிர்-விரிவாக்கம், எதிர்-பயங்கரவாதம், கடல்வழி பாதுகாப்பு, கடல்வழி விழிப்புணர்வு மற்றும் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம் ஆகியவற்றில் மூன்று நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்புதல் அளித்தன 
3) இன்டர்நெட் பாதுகாப்பு அச்சுறுத்தல் அறிக்கை
  • Internet Security Threat Report
  • சமீபத்திய இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல் அறிக்கையின்படி, இந்தியா மற்றும் சீனாவிற்கு பின்னால் இணைய அச்சுறுத்தல்களுக்கு உட்படும் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது
4) இந்தியா இரண்டாவது பெரிய ஸ்டீல் உற்பத்தி நாடு
  • இந்தியா ஜப்பான் நாட்டை பின்னுக்கு தள்ளி ஸ்டீல் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது
  • முதலிடம் – சீனா
  • மூன்றாமிடம் – ஜப்பான்
5) தேசிய கடல் தினம் - ஏப்ரல் 5
  • ஏப்ரல் 5 ம் தேதி தேசிய கடல்சார் தினமாக கொண்டாடப்படுகிறது. இது சர்வதேச வர்த்தகத்தை ஆதரிப்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் நோக்குடன் கொண்டாடப்படுகிறது
  • இந்திய கப்பல் - ஒரு பெருங்கடல் வாய்ப்பு என்பதே 2018-ம் ஆண்டிற்கான நோக்கமாகும்
6) 2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்
  • 2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தில் நகரின் கோல்ட் கோஸ்ட் ( Gold Coast, Queensland ) என்னும் இடத்தில் நடைபெறுகிறது
  • இது 21-வது காமன்வெல்த் போட்டி ஆகும். இது கோல்ட் கோஸ்ட் 2018 ( Gold Coast 2018 ) என்று அழைக்கப்படுகிறது

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad