TNPSC Daily Current Affairs in Tamil - March 24, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Friday, April 7

TNPSC Daily Current Affairs in Tamil - March 24, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN



TNPSC Daily Current Affairs in Tamil, March 24, 2017 - TNPSCGURU.iN

  • மார்ச் 24, 2017 – உலக காசநோய் தினம்
    • இந்த நோய் மைகோபேக்டீரியம் என்னும் நுண்ணியிரியினால் ஏற்படுகிறது
  • ஏபல் பரிசு 2017
    • 2017-ம் ஆண்டிற்கான ஏபல் பரிசு ஐவிஸ் மேயர் ( Yves Meyer ) என்பவருக்கு வழங்கப்பட்டது
    • இந்த பரிசானது நார்வே அறிவியல் மற்றும் கடிதம் அகாடமி சார்பாக கணித துறையில் வழங்கப்பட்டது
    • இந்த பரிசானது ஐவிஸ் மேயரின் “வேவ்லெட் கோட்பாடு”-காக ( Theory of Wavelet ) வழங்கப்பட்டது
  • அசோகமித்திரன் (உண்மையான பெயர் : தியாகராஜன் )
    • இவர் ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர். சமீபத்தில் காலமானார்
    • இவர் “அப்பாவின் சிநேகிதர்” என்னும் புத்தகத்திற்காக 1996-ம் ஆண்டு சாகித்திய அகாடெமி விருதைப் பெற்றார்
  • எஸ். நாகராஜன் – தேசிய பால் பொருட்கள் மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குனர்
  • ஐ.எஸ்.எஸ்.எப். உலக கோப்பை ( துப்பாக்கி சுடுதல் )
    • இதில் சிறிய இரட்டைக் குழல் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவை சார்ந்த அங்குர் மிட்டல் ( Ankur Mittal ) என்பவர் தங்கம் வென்றார்
  • குறைவான அளவு ஆர்டிக் பனி பதிவு
    • மார்ச் மாதங்களில் ஆர்டிக் பிரதேசத்தின் துருவ பனி விரிப்பு அதிகமாக இருக்கும்
    • பின்னர் கோடை கால வெயிலால் பணி உருகி செப்டம்பர் மாதத்தில் இதன் அளவு குறைவாக இருக்கும்
    • இந்த மார்ச் மாத பனி அளவு 14.42 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள். இது கடந்த 38 வருடங்களில் குறைவான பதிவு ஆகும்
  • உலக ஆற்றல் மற்றும் வளர்ச்சி செயல்திறன் குறியீட்டு எண் 2017
    • இது உலக பொருளாதார மன்றத்தால் வெளியிடப்பட்டது
    • இந்த தர வரிசையில் இந்தியா 87-வது இடத்தைப் பிடித்தது
    • முதல் மூன்று நாடுகள்சு
      1. சுவிட்சர்லாந்து
      2. நார்வே
      3. சுவீடன்

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad