TNPSC Current Affairs – March 24 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Monday, April 2

TNPSC Current Affairs – March 24 2018 – Tamil


TNPSC Current Affairs - March 2018 by TNPSC Guru

TNPSC Current Affairs – March 24 2018 – Tamil (tnpscguru.in)


1) உலக மணி நேரம் – மார்ச் 24

  • மார்ச் 24-ம் நாள் இரவு 8:30 முதல் 9:30 வரை உலக அளவில் விளக்குகளை அனைத்து உலகின் தட்ப வெட்ப மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்தப்படுகிறது 
  • இது முதலில் ஆஸ்திரேலியாவில் 2007-ம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது இந்தியா உட்பட 187 நாடுகளில் நடத்தப்படுகிறது 
  • இவ்வருட நோக்கம் பன்முகத்தன்மை மற்றும் வனவிலங்கு பற்றிய வெப்பமயமாதலின் தாக்கம் 

2) முதல் இந்திய செய்கை மொழி அகராதி
  • மத்திய அமைச்சர் தவர்சாந்த் கேலோத் ( Thaawarchand Gehlot ) 3000 வார்த்தைகள் கொண்ட இந்த கராதியை வெளியிட்டார் · இது இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தால் உருவாக்கப்பட்டது
  • இந்திய சைகை மொழியில் அதிக தகவல்களை வழங்குவதில் கவனம் செலுத்துவதன் மூலம், காது கேளாதோர் மற்றும் செவிலியர்களிடையே உள்ள தொடர்புத் தடைகள் அகற்ற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.


3) விண்வெளி தர லித்தியம்-ஐயோன் செல்கள்

  • ஸ்பேஸ் கிரேடு லித்தியம்-அயன் கலங்களை உற்பத்தி செய்ய தொழில்நுட்பத்தை மாற்றுவதற்காக பாரத் ஹெவி எலெக்ட்ரிகஸ் லிமிடெட் உடன் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்துடன் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
  • உயர் ஆற்றல் அடர்த்தி, நம்பகத்தன்மை மற்றும் நீண்ட ஆயுதம், லித்தியம்-அயன் பேட்டரிகள் ஆகிய தன்மைகள் இருப்பதால் சேட்டிலைட் மற்றும் ஏவுகணை பயன்பாட்டிற்கான மின் ஆதாரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன
4) சந்திரயான்-2 ஒத்திவைக்கப்பட்டது
  • பல சோதனைகள் செய்யப்பட இருப்பதால் சந்திரயான் -2 ஏவுகணை விண்ணில் செலுத்துவது 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தள்ளிவைக்கப்பட வேண்டும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது
  • இது சந்திரனுக்கு ரோவர், லேன்டர் ஆகியவட்ட்ரை கொண்டு செல்வதால் இது முக்கியமான பணியாக கருதப்படுகிறது 

5) நைபுண்யா ரதம் ( Naipunya Ratham ) 

  • ஆந்திரா கிராமப்புற பகுதிகளில் ஒவ்வொரு மூலையிலும் தொழில்நுட்பத்தை கொண்டு வருவதற்கான பல பயன்பாட்டு வாகனங்களை நைபுண்யா ரதம் என்கிற பெயரில் அந்த மாநில அரசு செயல்படுத்துகிறது


6) ஏபல் விருது 2018
  • கனடாவை சேர்ந்த ராபர்ட் பி லாங்லேண்ட்ஸ் ( Robert P Langlands ) என்பவர் மதிப்பு மிக்க இந்த விருதினை பெற்றார் 
  • இது கணித மேதைகளுக்காக நார்வே அரசாங்கத்தால் வருடாந்தரம் வழங்கப்படும் விருது ஆகும் 

7) ஐ.என்.எஸ். கங்கா
  • இந்திய போர்க்கப்பல் ஐ.என்.எஸ். கங்கா தன சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டது 
  • இது டிசம்பர் 1985-ம் ஆண்டு படையில் சேர்க்கப்பட்டது

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad